இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
பிரபல தெலுங்கு தயாரிப்பளார் சி.கல்யாண். ஜோதி லட்சுமி, லோபர், ஜெய்சிம்மா, இண்டலிஜெண்ட, ரூலர் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக இருந்தார்.
ஆந்திர மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை, அதற்குரிய வரி உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் ஆந்திர அமைச்சர் பேர்னி நானி, தயாரிப்பாளர்கள் தில் ராஜு, டிவிவி தானய்யா உள்ளிட்ட பல முக்கியத் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தயாரிப்பாளர் சி.கல்யாணும் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் கல்யாண் பேசியது இப்போது சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசியிருப்பதாவது: போஸ்டர்களில் ரூ.200 கோடி, ரூ.500 கோடி வசூல் என்று போடுவதெல்லாம் மக்களை ஏமாற்றவே. ஹிட் ஆகியிருக்கும் ஒரு திரைப்படத்தை அவர்கள் தவறவிடுகிறார்கள் என்கிற எண்ணத்தை உருவாக்கவே இதைச் செய்கிறோம். இதனால் பலன் கிடைத்திருக்கிறது. இங்கு தவறுகளே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எல்லாம் தவறாக நடக்கவில்லை. சில படங்கள் உண்மையிலேயே நல்ல வசூலைப் பெறுகின்றன. என்று பேசியுள்ளார்.
இந்த பேச்சை செல்போனில் பதிவு செய்து யாரோ வெளியிட்டுள்ளனர். அது இப்போது சர்ச்சை ஆகியுள்ளது.