5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
அசோக்குமார், யாஷிகா ஆனந்த் நடித்த பெஸ்டி படத்தை சாரதிராஜா தயாரிக்க, ரங்கை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இயக்குனர் கூறியதாவது:
இளமை துள்ளலுடன், திகிலும், மர்மமும் நிறைந்த படமாக உருவாக்கியுள்ளேன். படப்பிடிப்பு முடிந்த பின் யாஷிகா விபத்தில் சிக்கினார். இதில் கிளாமரில் மட்டுமல்லாது நடிப்பிலும் அவர் அசத்தியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த், டொராண்டோ தமிழ் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதினை பெற்றார். அமெரிக்காவில் நடந்த லாஸ் விகாஸ் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. கொல்கத்தாவில் நடந்த விர்ஜின் ஸ்பிரிங்' திரைப்பட விழாவில் அசோக்குக்கு சிறந்த நடிகருக்கான விருதும், கதை சொல்லல், திரைக்கதை அமைத்தல், இயக்கம் என ‛பெஸ்டி' படத்தை எழுதி இயக்கிய எனக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. மேலும் பல விழாக்களில் திரையிட ஏற்பாடு செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.