திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் தமிழ் நடிகைகளின் போட்டோஷூட் அணுகுமுறையையே மாற்றி அமைத்தவர் நடிகை ரம்யா பாண்டியன் . வெள்ளித்திரையில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் போதுமான புகழ் வெளிச்சத்தை அவரால் பெற முடியவில்லை.
இதற்கிடையே இன்ஸ்டாகிராமை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரம்யா சேலையில் ஹாட்டாக வெளியிட்ட புகைப்படங்கள் செம ட்ரெண்டாக ஒரே நாளில் இளசுகள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து பல நடிகைகளும் அதே பாணியில் புகைப்படங்களை வெளியிட்டனர் என்பது வேறு கதை.
பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோக்களின் மூலம் தனது இமேஜை மேலும் பூஸ்ட் செய்து கொண்ட ரம்யா ரசிகர்களுக்காக இண்ஸ்டாவிலும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தனது உடலை ஃபிட்டாகவும் அழகாகவும் வைத்திருக்கும் அவர் தற்போது டென்னிஸ் உடை போன்ற குட்டையான உடை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அதை பார்க்கும் நெட்டீசன்கள் செம ஃபிட்டு, ரொம்ப ஹாட்டு என கமெண்டுகள் அடித்து வருகின்றனர்.