துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஏராளமான மலையாள படங்களில் நடித்தவர் கனிகா. பைவ் ஸ்டார், வரலாறு, ஆட்டோகிராப் போன்ற தமிழ் படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். தற்போது மலையாளத்தில் பிசியான குணசித்ர நடிகையாக இருக்கிறார். மலையாளத்தைத் தவிர தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் நடித்திருக்கிறார்.
கனிகாவுக்கு தற்போது 40வது வயது நடக்கிறது. மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்திலும் பிசியாக இருக்கிறார். அவ்வப்போது தனது படங்களை, வீடியோக்களை இன்ஸ்ட்ராகிராமில் பதிவிடுவார். லட்சக்கணக்கில் அவரை பின் தொடர்கிறார்கள்.
தற்போது புல்லட் பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். "எதையும் கற்றுக்கொள்ள காலதாமதம் செய்யகூடாது. சரியான தருணத்திற்காக காத்திருக்கவும் கூடாது. ஒவ்வொரு தருணத்தையும் நம்முடையதாக்கி கொள்ள வேண்டும்" என்று அவர் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.