தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கியாரா அத்வானி. தெலுங்கில் ஏற்கனவே நடித்துள்ள இவர் இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படம் தமிழிழும் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 66வது படத்தை வம்சி இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கியாரா அத்வானி, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வந்தநிலையில், இப்போது கியாரா அத்வானியிடமே வம்சி பேச்சுவார்த்தை நடத்தி, கிட்டத்தட்ட ஓகே செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதிக்கிறார் கியாரா. விஜய்யின் 66வது படம் தெலுங்கு, தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் உருவாகிறது. இதனால் ஹிந்தி நடிகை ஒருவர் நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்பதால் இவரை தேர்வு செய்துள்ளாராம் வம்சி.