இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் | ரஜினியின் முதல் படமும், 50வது ஆண்டு 'கூலி' படமும் வெளியாகும் ஒரே தியேட்டர் | நடிகர் சங்க பொதுச்செயலாளராக போட்டியிடுபவருக்கு எதிராக பரப்பப்படும் மெமரி கார்டு குற்றச்சாட்டு | சோதனை அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு பின் மாஸ்க் கழட்டிய அல்லு அர்ஜுன் ; வைரலாகும் வீடியோ | ஹோட்டலில் 100 பேர் மத்தியில் அழ வைத்து ஆடிசன் செய்தார்கள் ; நடிகை இஷா தல்வார் | அரை சதத்தை தொட்ட மகேஷ் பாபு ; சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் வாழ்த்து | கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்த சின்ன குஷ்பூ நடிகை |
நடிகர் சிம்புவுக்கு ரசிகர் மன்றம் செயல்பட்டு வருகிறது. அதனை அவரது தந்தை டி.ராஜேந்தரும், சித்தப்பா டி.வாசுவும் நிர்வகித்து வருகிறார்கள். இருவரும் அடிக்கடி மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசுவார்கள். இந்த நிலையில் சிம்பு தனது ரசிகர் மன்றத்தை விரிவு படுத்த தீர்மானித்திருக்கிறார்.
இது தொடர்பாக சிம்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இயற்கையின் செயல்களால் நீண்ட நாளாக உங்களை நேரடியாக சந்திக்காமல் தொலைபேசி வழியாகவே பேசி வந்தோம். இப்போது இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணியின் மூலம் நற்பணி மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம். மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.