பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
ஜோதிகாவின் 50வது படமாக ஆயுத பூஜையை முன்னிட்டு அக்.,14ல் ஓடிடியில் வெளிவருகிறது ‛உடன்பிறப்பே' படம். கிராமத்து கதையில் அண்ணன் - தங்கை உறவை மையமாக வைத்து இந்தபடம் உருவாகி உள்ளது. அண்ணனனாக சசிகுமாரும், தங்கையாக ஜோதிகாவும், இவரின் கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். சரவணன் இயக்கி உள்ளார். ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா தயாரித்துள்ளார்.
ஜூம் மீட்டிங் வாயிலாக ஜோதிகா அளித்த பேட்டி : இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக என் மாமியார் உள்ளிட்ட என் கணவரின் குடும்பத்தினரை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன். நிறைய ஆய்வு செய்து, பயிற்சி மேற்கொண்டு நடித்தேன். கொரோனா ஊரடங்கு காலக்கட்டம் அதற்கு உதவியாக இருந்தது என்றார்.
ஓடிடி வெளியீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, ‛‛எனது 50வது படம் தியேட்டர்களில் வெளியிடாதது வருத்தம் தான். இருப்பினும் இது முன்பே திட்டமிடப்பட்டது. கொரோனா காலம் என்பதால் தியேட்டர்கள் எப்போது திறக்கும், சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் தான் ஓடிடி முடிவை எடுத்தோம்'' என்றார்.
சூர்யாவுடன் மீண்டும் நடிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, ‛‛நல்ல கதைக்காக இருவருமே காத்திருக்கிறோம். அமைந்தால் நிச்சயம் மீண்டும் இணைந்து நடிப்போம்'' என்றார்.