துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஜி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவால் சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியலை ஒளிபரப்புவதில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது ஜி தமிழ். இந்நிலையில் சமீபத்தில் ஜி தமிழில் ஒளிபரப்பாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்று வந்த 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி', 'சத்யா' ஆகிய தொடர்கள் வருகிற 24ம் தேதியோடு நிறுத்தப்படுவதாக தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து இந்த தொடர்களின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும், சீரியல்களை தொடரும்படி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பல்வேறு முறைகளில் வேண்டுகோள் வைத்து வந்தனர்.
இந்த தொடர்களுக்கு மக்களிடம் கிடைத்துவரும் வரவேற்பை புரிந்து கொண்ட தொலைக்காட்சி நிறுவனம், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அதிரடியான ப்ரோமோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் மக்கள் சீரியலை நிறுத்த வேண்டாம் என்பது போல் போராடியும் வேண்டுகோளும் வைத்து வருவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இறுதியில் ஒரு ஊருல 2 ராஜகுமாரி என்ற டைட்டிலுடன் ராசாத்திக்கு அவரை போலவே குண்டாக ஒரு குழந்தை இருப்பதாகவும், சத்யா-2 என்ற டைட்டிலுடன் பிரபு விரும்பிய படி சத்யா குடும்ப பெண்ணாக மாறியிருப்பது போலும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 24ம் தேதி இரண்டு தொடர்களின் இறுதி அத்தியாயம் முடிகிறது. அதேசமயம் 25ம் தேதி முதல் புதிய பொலிவுடன் இரண்டு சீரியல்களின் இரண்டாவது சீசன் ஆரம்பமாகவுள்ளது என்பதை 'நாங்க நிறுத்தல... ஆரம்பிக்கிறோம்' என ப்ரோமோவின் மூலம் ஜி தமிழ் தெரிவித்துள்ளது. புதிதாக வெளிவந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.