பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
தமிழ் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து, திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான அவரது வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்துவின் சோக கதை சக போட்டியாளர்கள் உள்பட ரசிகர்களையும் வருத்தம் கொள்ள செய்தது. அதன் காரணமாக அவருக்கு மக்களின் ஆதரவும் அதிகரித்தது. பிக்பாஸ் வீட்டில் நமீதா முக்கிய போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதற்கு காரணம் அவரது உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருகிறார் என சொல்லப்பட்டது. மேலும் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நமீதா தன்னுடைய முதல் வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில் ஏழை குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக் கொடுத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே சமூக நல அக்கறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசிய நமீதா மாரிமுத்து அவற்றை தொடர்ந்து செய்து வருகிறார். இதனை பார்க்கும் ரசிகர்கள் நமீதாவின் இந்த அறப்பணிகளை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.