விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

வருடத்தின் ஒளிமயமான பண்டிகையான தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில், குதூகலமூட்டும் பல திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. திரைப்படப் பிரியர்கள் முதல் ரியாலிட்டி தொடர் ரசிகர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பண்டிகைக்கால பல்சுவை சிறப்பு நிகழ்ச்சிகள் வருகின்ற நவம்பர் 4, வியாழக்கிழமை முழுவதும் ஒளிபரப்பாகும்.
தீபாவளியை மங்களகரமாகத் துவங்கும் வகையில், பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்கள் வழங்கும் ஒளிமயமான எதிர்காலம் ஸ்பெஷல் சிறப்பு ஜோதிட நிகழ்ச்சி காலை 7மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த ஒன்றரை மணிநேர சிறப்பு நிகழ்ச்சியில், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் விதங்களுக்குப் பின்னணியில் உள்ள அறிவுப்பூர்வமான சிந்தனைகள் குறித்து நேயர்களுக்கு அவர் விளக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு கலைமாமணி விருதினை வென்ற பிரபல தமிழ் பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் அறிஞருமான சுகி சிவம் அவர்கள் வழிநடத்தும் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் ஒளிபரப்பாகும்.
இதைத்தொடர்ந்து, நடிகரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான ஜகன் தொகுத்து வழங்கும் சர்வைவர் - நாங்கள் வேற மாதிரி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியில் சர்வைவர் தீவுகளிலிருந்து படகில் திரும்ப வந்த ஆறு போட்டியாளர்களான ஸ்ருஷ்டி டாங்கே, இந்திரஜா, ராம் சி, விஜே பார்வதி, பெசன்ட்ரவி மற்றும் காயத்ரி ரெட்டி உள்ளிட்டோரிடம் ஜகன் உரையாடவுள்ளார்.
மதியம் 12:30 மணிக்கு தனுஷ், லால், லக்ஷ்மி பிரியா, சந்திரமவுலி, ரஜிஷா விஜயன் மற்றும் யோகி பாபுவின் நடிப்பில்உருவான - இந்த ஆண்டின் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படமான கர்ணன் ஒளிபரப்பாகும்.
மாலை 4மணிக்கு மெகா தலைத் தீபாவளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சமீபத்தில் நடந்த ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கோலாகலத் திருமணங்களைத் தொடர்ந்து, புதுமணத் தம்பதிகளின் தலைத் தீபாவளியைக் கொண்டாட தயாராகிவிட்டது ஜீ தமிழ். ஆர்ஜே விஜய் மற்றும் ஆர்ஜே ஆனந்தி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நினைத்தாலே இனிக்கும் தொடரின் பொம்மி மற்றும் சித்தார்த், கோகுலத்தில் சீதை தொடரின் அர்ஜுன் மற்றும் வாசு, புதுப்புது அர்த்தங்கள் தொடரின் லக்ஷ்மி மற்றும் ஹரி கிருஷ்ணன், மற்றும் நீதானே என் பொன்வசந்தம் தொடரின் அணு மற்றும் சூர்ய பிரகாஷ் ஆகியோர் இந்த மெகா தலைத் தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்கவுள்ளனர்.
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு முத்தாய்ப்பாக, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாகத் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பாக, நேரடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டிக்கிலோனா திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தனக்குப் பிடிக்காத கடந்த காலத்தை மாற்றுவதற்காககாலத்தில் பின்னோக்கி பயணிக்கும் ஒருவன் எதிர்கொள்ளும் விளைவுகளே இத்திரைப்படத்தின் சுவாரஸ்யமான கதையாகும். சந்தானம், அனகா, ஷிரின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் மாலை 6 மணிக்கு ஜீ தமிழ் டிவியில் வெளியாகவுள்ளது.
இந்த தீபாவளிக்கு ஜீ தமிழுடன் இணைந்து பொழுதுபோக்கு நிறைந்த ஒரு நாளிற்குத் தயாராகுங்கள்.