சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

வெள்ளித்திரை நடிகையான ராஜஸ்ரீ தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கருத்தம்மா படம் தமிழ் திரையுலகில் மிக முக்கிய படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அந்த படத்தின் டைட்டில் ரோலில் நடித்த ராஜஸ்ரீ அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தார். அவர் தற்போது கலர்ஸ் தமிழின் ஹிட் தொடரான சில்லுனு ஒரு காதல் தொடரில் கல்பனா தேவி எனும் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் ஏற்கனவே வில்லி கதாபாத்திரங்களில் நடித்த ராஜஸ்ரீ தற்போது ரீ என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ராஜஸ்ரீ தமிழில் முன்னதாக 'கங்கா யமுனா சரஸ்வதி', ‛அகல் விளக்குகள்', 'வம்சம்', 'மகள்', 'சித்தி' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.