போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நடிகை பரீனா ஆசாத் தான் சீக்கிரம் பழைய வெண்பாவாக வந்துவிடுவேன் என ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் முக்கிய சீரியலான பாரதி கண்ணம்மாவில் வெண்பா என்ற கேரக்டரில் வில்லி நடிகையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பரீனா ஆசாத். நிறைமாத கர்ப்பினியாக இருந்தபோதும் ஷூட்டிங்கில் எனர்ஜிட்டிக்காக கலந்து கொண்டு திறமையை நிரூபித்தார். இந்நிலையில் பரீனாவுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு அழகான ஆண் குழந்தையை பிறந்துள்ளது. இதனையடுத்து பிரசவத்தின் காரணமாக வெண்பா சீரியலில் தொடர்ந்து நடிக்கமாட்டார் என பலரும் கருதிவந்தனர்.
ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஃபரீனா ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்துள்ளார். பரீனா ஆசாத்துக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ள நிலையில் மருத்துவமனையில் தான் இப்போது இருந்து வருகிறார். மருத்துவமனை பெட்டில் படுத்தவாறு செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், 'நானும் எனது மகனும் நலமுடன் இருக்கிறோம். சுகப்பிரசவம் தான். விரைவில் திரும்புவேன்' என கூறியுள்ளார். இதன் காரணமாக பரீனா மிக விரைவில் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.