துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ்- 5 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பாவனியும் ஒருவர். 100 நாட்களுக்கு மேலாக இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது இடம் பிடித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு டாஸ்க்கின் போது, தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதன்பிறகு ஏற்பட்ட தனது இரண்டாவது காதலும் தோல்வியில் முடிந்தது என்று தெரிவித்திருந்தார்.
அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமீர் தன்னை காதலிப்பதாக கூறியபோதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்து விட்டார் பாவனி. இந்த நிலையில் ரசிகருடன் அவர் உரையாடியபோது, திருமணம் குறித்து ஒரு ரசிகர் கேள்வி கேட்டார். அதற்கு, வாழ்க்கையில் இனி திருமணம் என்பதே இல்லை. எனது முழு கவனமும் நடிப்பில்தான் இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.