போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸின் குரலாக கம்பீரமாக ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு அந்த குரலும் ஒரு காரணம். முதல் நான்கு சீசன்களின் போதும் பிக்பாஸின் குரலாக ஒலிப்பது யாருடைய குரல் என்று யாருக்குமே தெரியாது. நான்காவது சீசனின் முடிவில் தான் பிக்பாஸ் குரல் யாருடையது என்ற தகவல் வெளியிடப்பட்டது. தமிழில் ஒளிபரப்பான 5 சீசனுக்குமே பிக்பாஸுக்கு குரல் கொடுத்தவர் சாஷோ என்ற வாய்ஸ் ஆர்டிஸ்ட் தான்.
டப்பிங் ஆர்டிஸ்டாக மட்டுமில்லாமல் ஸ்கிரிப்ட்டிலும் கலக்குவார், அவ்வப்போது போட்டியாளர்களை கலாய்த்தும், தேவையான சமயம் ஆறுதல் சொல்லியும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சூப்பராக நடத்தி வருகிறார். அவர் சம்பளம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு சாஷோவுக்கு மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் சாஷோ தான் குரல் கொடுக்கவுள்ள நிலையில், அதில் அவருக்கு தொகை பெரிய சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.