துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அதிக பிரபலமடைந்தவர் புகழ் தான். சினிமா ஷூட்டிங்கில் பிசியாக இருந்த புகழ், தற்போது குக் வித் கோமாளி சீசன் 3-ல் எண்ட்ரி கொடுத்துள்ளதால் ரசிகர்கள் குஷியாக உள்ளனர். இந்தவாரம் ஒளிபரப்பான எபிசோடில் புகழ் தனது திருமணம் பற்றி பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
செப் வெங்கடேஷ் பட், புகழிடம் அவர் காதல் கதை குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த புகழ், 'சுமார் 5 வருடங்களாக பென்சியை காதலித்து வருகிறேன். விஜய் டிவி வருவதற்கு முன்பே, பென்சியை எனக்கு சிரிப்புடா நிகழ்ச்சியின் போது தெரியும். இப்போது வரை எனக்கு சப்போர்ட்டாக இருந்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பவித்ரா, தர்ஷாவுடன் செய்யும் கலாட்டக்களை ரசிப்பார். 'அப்படியே கண்டினியூ பன்னு. ஆடியன்ஸ் உங்கிட்ட அத தான் எதிர்பாக்குறாங்க. நான் தப்பா நினைக்கமாட்டேன்' என நம்பிக்கையுடன் பேசுவார். பென்சிக்கும் கோயம்புத்தூர் தான். இந்த வருடத்தில் கல்யாணம் செய்து விடுவேன்' என கூறியுள்ளார்.
புகழும், பென்சியும் தாங்கள் காதலித்து வருவதை சமீபத்தில் தான் சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது புகழ் திருமணம் குறித்து தெரிவித்துள்ள தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.