போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹிட் தொடர்களில் ஒன்று செந்தூரப்பூவே. நடிகர் ரஞ்சித், ஸ்ரீநிதி மேனன், தர்ஷா குப்தா மற்றும் ப்ரியா ராமன் ஆகியோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். தொடக்கத்தில் சுவாரசியமாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் போக போக போக அதன் சுவாரஸ்யம் குறைந்தது.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிய இந்த தொடர் டிஆர்பியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. எனவே, தொலைக்காட்சி நிறுவனம் செந்தூரப்பூவே தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு போட்டு முடித்து வைக்கவுள்ளதாகவும், அதே டைம் ஸ்லாட்டில் புதிய தொடர் ஒன்றை ஒளிபரப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவால் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ள 'சிப்பிக்குள் முத்து' என்கிற புதிய தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.