தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீஜே அர்ச்சனா. பரீனாவுக்கு அடுத்தப்படியாக இல்லத்தரசிகள் கோபமாக இருப்பது இவர் மேல் தான். அந்த அளவுக்கு வில்லத்தனமான நடிப்பிற்கு பெயர் வாங்கிவிட்டார். இதை குறிப்பிட்டு சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூட அர்ச்சனாவின் தாயார் தனது மகளை திட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இன்ஸ்டாவில் செம ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறார். இந்நிலையில், மாடர்னான கிளாமர் உடையில் நடுரோட்டில் நிற்கும் பைக் மீது சாய்ந்து கவர்ச்சியாக போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுக்கிறார். அதன் மேக்கிங் வீடியோவையும் எடுத்து வெளியிட்டுள்ளார். மற்ற நடிகைகள் போல அர்ச்சனாவும் கவர்ச்சியில் இறங்குகிறாரா என்ற கேள்வியை இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.