துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சுந்தரி தொடர் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சுந்தரி என்கிற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடிக்கிறார். சமீபத்தில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கேப்ரில்லா செல்லஸூக்கு பேவரைட் ஹீரோயின் கேட்டகிரியில் விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய கேப்ரில்லா தனது அம்மா மற்றும் அம்மாச்சி குறித்து உருக்கமாக பேசி தனது நடிப்பிற்கும், விருதுக்கும் அவர்கள் தான் காரணம் என புகழ்ந்திருந்தார்.
இந்நிலையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கணவர் ஆகாஷ் தன்னை அணைத்து முத்தமிடும் போட்டோவை பகிர்ந்து அதன் கேப்ஷனில் “பாப்பா சாரி பாப்பா ஸ்டேஜ்ல உன் பேர சொல்ல மறந்துட்டேன்....பதட்டத்துல” என மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு கீழே “உண்மையாவே அம்மா அம்மாச்சி தானே சொல்லணும், உண்மைய மட்டும் சொல்லு பாப்பா போதும்” என கணவர் கூறிய பதிலையும் பதிவிட்டு, 'பாப்பா...நீ தான் என்னுடைய வாழ்நாட்களுக்கான விருது' என தெரிவித்துள்ளார். இவர்களது காதலை பார்க்கும் பலரும் இது தான் உண்மையில் ரியல் ஜோடி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.