2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தமிழ் சீரியல்களில் நடித்தவர்கள் நடிகர் முன்னாவும், நடிகை ஹர்ஷாலா ஹனி. பார்ப்பதற்கு அமுல் பேபி போல் இருக்கும் ஹர்ஷாலா ஹனி ஹீரோயினாக நடிக்கவில்லையென்றாலும் அவருக்கு தற்போது பேன் பாலோவர்ஸ் உள்ளனர். அவர் சீக்கிரமே ஹீரோயினாக நடிக்க வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் விரும்பி வந்தனர்.
இந்நிலையில், ஹர்ஷாலா ஹனியும், தமிழில் சில சீரியல்களில் ஹீரோவாக நடித்த முன்னாவும் ஜோடியாக இணைந்து தெலுங்கு சீரியலில் நடிக்க உள்ளனர். அந்த தொடரில் பிட்னஸ் பீர்க்காக வரும் ஹீரோ முன்னா தனது ஜிம்மில் உடற்பயிற்சிக்காக வரும் இளம் பெண்களை பிழிந்தெடுத்து பயிற்சி கொடுக்கிறார். பெண் என்றால் பிட்டாக இருக்க வேண்டும். குண்டாக இருக்கக்கூடாது என அட்வைஸ் வேறு கொடுக்கிறார்.
ஆனால், பிட்னஸ் பற்றி அக்கறை இல்லாத ஹர்ஷாலா பஜ்ஜி சாப்பிடும் போட்டியில் அடித்து நொறுக்கி பரிசை வெல்கிறார். அதேசமயம் அந்த பரிசு பணத்தை ஒரு ஏழைக்குழந்தைக்கு உதவுவதற்காக கொடுக்கிறார். இப்படி இருவேறு திசைகளில் பயணிக்கும் நாயகனும், நாயகியும் எப்படி வாழ்வில் ஒன்றிணைய போகின்றனர் என்பது தான் சீரியலின் கதை.
தெலுங்கில் 'குண்டம்மா கதா' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகி தமிழ் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.