செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் அந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வந்த ஆல்யா மானசா, பிரசவத்தின் காரணமாக வெளியேறிய நிலையில், ரியா விஸ்வநாத் என்ற புது நடிகை நடித்து வந்தார். அவரும் தனது நடிப்புத் திறமையால் மக்களின் மனதில் இடம் பிடித்து சந்தியா கதாபாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டார். இந்த தொடரில் கதாநாயகிக்கு இணையாக மிகவும் பிரபலமான கதாபாத்திரம் என்றால் அது வில்லி அர்ச்சனாவின் கதாபாத்திரம் தான்.
இந்த கதாபாத்திரத்தில் வீஜே அர்ச்சனா நடித்து காமெடியிலும் வில்லத்தனத்திலும் கலக்கி வந்தார். பாரதி கண்ணம்மா பரீனாவுக்கு அடுத்தப்படியாக அதிகமாக ரசிகர்களிடம் திட்டு வாங்கிய வில்லி நடிகை அர்ச்சனா தான். சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் கூட அர்ச்சனாவின் நடிப்பை பாராட்டி விருது வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், அர்ச்சனா தற்போது ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும், இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அர்ச்சனா தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.