சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கமல்ஹாசன் தயாரித்து, நடித்துள்ள படம் விக்ரம். 5 வருட இடைவெளிக்கு பிறகு கமல் நடிப்பில் வெளிவரும் படம். மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். கமலுடன் விஜய் சேதுபதி, பகத்பாசில், சூர்யா, காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன் 3ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தில் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.
விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த 15ம் தேதி, நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாய் நடந்தது. இவ்விழாவில் படக்குழுவினருடன் பார்த்திபன், பா.ரஞ்சித், சிம்பு, உதயநிதி, ராதிகா, லிஸி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி வரும் 22ம் தேதி மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
விக்ரம் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தியேட்டர் வெளியீட்டுக்கு பிறகு தமிழில் விஜய் டிவியிலும், மலையாளத்தில் ஏசியா நெட்டிலும், ஹிந்தியில் ஸ்டார் கோல்ட் சேனலிலும், கன்னடத்தில் ஸ்டார் சுவர்ணாவிலும், தெலுங்கில் ஸ்டார் மா சேனலிலும் ஒளிபரப்பாகிறது.