சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

'பூவே உனக்காக' தொடரில் பூவரசியாக முதலில் நடித்து வந்தவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. இவரது நடிப்பும் அழகும் பலரையும் கவர்ந்தது. பலரும் இவரை சோஷியல் மீடியாவில் ரசிகர்களாக பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ராதிகா ப்ரீத்தி திடீரென பூவே உனக்காக தொடரை விட்டு விலகினார். தொடர்ந்து வேறு எந்த ப்ராஜெக்ட்களிலும் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகவில்லை. எனவே, அவரது ரசிகர்கள் பலரும் வருத்தமடைந்தனர். இருப்பினும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி இப்போதெல்லாம் விதவிதமாக போட்டோக்களை பகிர்வதோடு, தொட்டும் தொடாமல் கவர்ச்சியும் காட்டி வருகிறார். அந்த வகையில் நீச்சல் குளத்திற்கு அருகில் நிற்கும் ராதிகா ப்ரீத்தி வெள்ளை நிற டி ஷர்ட்டில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். ராதிகாவின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது இந்த ஸ்டைலீஷ் போட்டோ. இதை பார்க்கும் ரசிகர்கள் அவரை பால்கோவா சிலை என்று வர்ணித்து வருகின்றனர்.