மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சின்னத்திரை இயக்குநர் திருமுருகனை கோபி என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு கோபி என்ற பெயருடன் சீரியல் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். 1998 முதலே பயணிக்க ஆரம்பித்த திருமுருகன் இதுவரை 14 சீரியல்களை இயக்கியுள்ளார். இதில் 'மெட்டில் ஒலி', 'நாதஸ்வரம்', 'குல தெய்வம்', 'கல்யாண வீடு' ஆகிய சீரியல்கள் சூப்பர் ஹிட்டானது. கடைசியாக கொரோனா சமயத்தில் உடல்நலக்குறைவால் ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கொண்ட அவர், எப்போது கம்பேக் கொடுப்பார் என அனைவருமே எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், 'கோபி ரிட்டர்ன்ஸ்' என சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம் திருமுருகன் தனது அடுத்த சீரியலுக்கான முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டார். இதற்கான ஆடிஷனும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியலையும் திருமுருகன் தனது ஆஸ்தான டிவிக்கு தான் இயக்குகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விரைவில் திருமுருகனின் புதிய சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.