மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' |
சின்னத்திரை நடிகரான நவீனுக்கும், செய்தி வாசிப்பாளரான கண்மணிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட இந்த ஜோடி திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக சுற்றுலா சென்று ஹனிமூனை எஞ்சாய் செய்து வருகின்றனர். மனைவியுடன் ஏர்போர்ட்டில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட நவீன் 'பர்ஸ்ட் ட்ரிப் வித் பொண்டாட்டி' என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கண்மணி இன்ஸ்டாவில் நவீன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஹோட்டல் ரூமுக்குள் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' என்கிற பாடலுக்கு நவீன் நடனமாடுகிறார். அந்த பாடலுக்கு நடன மாஸ்டர் ராஜசுந்தரம் போட்ட அதே ஸ்டெப்புகளை அப்படியே போட்டு அருமையாக நடனமாடி அசத்தியுள்ளார். நவீனுக்கு இப்படி ஒரு நடனத்திறமையா என ரசிகர்களே ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். தற்போது நவீனின் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.