துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதிதாசன் காலனி' என்கிற தொடரில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராம் சாய். இவர் பிரபல சீரியல் நடிகை கீதாஞ்சலியின் தங்கை என்பது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியம் தரும் செய்தியாக உள்ளது. 'நாதஸ்வரம்' சீரியலில் மஹா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான கீதாஞ்சலி, தொடர்ந்து 'வாணி ராணி', 'கல்யாண வீடு' மற்றும் விஜய் டிவியின் 'ராஜா ராணி' தொடரிலும் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின் கணவருடன் துபாயில் செட்டிலாகிவிட்ட கீதாஞ்சலி நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டார். தற்போது அவரது தங்கை ஐஸ்வர்யா ராம் சாய் 'பாரதிதாசன் காலனி' தொடரில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார். அக்காவை பார்ப்பதற்காக துபாய் சென்றுள்ள ஐஸ்வர்யா அங்கே கீதாஞ்சலியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் சகோதரிகளா? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.