ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சின்னத்திரையில் நடிகர்களுக்கு இணையாக தற்போது செய்தி வாசிப்பாளர்களும் பிரபலங்களாகி வருகின்றனர். நியூஸ் ரீடராக இருந்து இன்று சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கி வருவபர்களில் ப்ரியா பவானி சங்கர், சரண்யா துராடி, அனிதா சம்பத் மற்றும் கண்மணி சேகர் ஆகியோருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வரிசையில் புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 18 தமிழ் ஆகிய சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வரும் லாவண்யா ஸ்ரீராமுக்கும் இப்போதே ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.
இதுநாள் வரை புடவை, மாடர்ன் உடை என கேசுவலான புகைப்படங்களை வெளியிட்டு வந்த லாவண்யா தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தின் பூங்குழலி கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மற்ற நடிகைகள் கூட குந்தவை நந்தினி கெட்டப்பில் தான் போட்டோஷூட் நடத்தி வந்தனர். ரசிகர்களின் பல்ஸை புரிந்து கொண்ட லாவண்யாவோ பூங்குழலி கெட்டப்பில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இந்த கனவு கன்னிக்கு நெட்டிசன்கள் ஹார்டின்களை தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.