2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

செய்திவாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் சிறு ரோலில் நடித்திருந்தார். அதன்பின் வேறு சில படங்களிலும் அனிதாவுக்கு சிறு சிறு ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' மற்றும் 'காலங்களில் அவள் வசந்தம்' ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், தொடர்ந்து அவருக்கு வெள்ளித்திரையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்ததாக தெரியவில்லை. இதனையடுத்து அனிதா சம்பத் மீண்டும் சின்னத்திரை பக்கமே வந்துள்ளார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'மந்திர புன்னகை' என்ற தொடரில் ஹீரோயினுக்கு தோழியாக அனிதா சம்பத் என்ட்ரி கொடுத்துள்ளார். சின்னத்திரையில் அனிதாவுக்கு எப்போதும் வாண்டட் இருந்து கொண்டு தான் இருக்கிறது.