துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'தமிழும் சரஸ்வதியும்' தொடரியில் நாயகனின் தங்கையாக ராகினி என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தவர் லாவண்யா மாணிக்கம். முன்னதாக 'அம்மன்', 'நாயகி' ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் சின்னத்திரையை விட இன்ஸ்டாகிராமில் தான் அவர் மிகவும் பிரபலமனார். பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் கட்டழகு கன்னி லாவண்யா மாணிக்கம், மாடலிங்கில் பல தரமான போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். தனியாக க்ளாமர் தேவையில்லை என்று சொல்லுமளவிற்கு எந்த ப்ரேமில் நின்றாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்திழுந்து வருகிறார்.
இந்நிலையில் லாவண்யா மாணிக்கம் தற்போது சினிமாவில் என்ட்ரியாகியுள்ளார். மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் 'பகாசூரன்' படத்தில் லாவண்யா மாணிக்கமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டிரைலரானது அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து லாவண்யாவின் திரைப்பயணம் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.