கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு |
தொலைக்காட்சி ஆங்கரான ஜாக்குலின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து விஜய் டிவியின் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர் 'கனா காணும் காலங்கள்', 'ஆண்டாள் அழகர்' வெள்ளித்திரையில் நயன்தாராவின் தங்கையாக 'கோலமாவு கோகிலா' படத்திலும் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
ஆனால், ஜாக்குலின் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமான 'தேன்மொழி' சீரியலில் கமிட்டான போது ஆங்கரிங் செய்வதிலிருந்து கொஞ்சம் விலகினார். இந்த தொடரானது ஆரம்பத்தில் சிறப்பாக பேசப்பட்டாலும் கொரோனா மற்றும் சில காரணங்களினால் மோசமான சூழலில் முடித்து வைக்கப்பட்டது. அதன்பிறகு ஜாக்குலின் தொலைக்காட்சி, சீரியல், சினிமா என எதிலுமே தோன்றவில்லை.
இதைகுறிப்பிட்டு, 'சீரியலுக்கு நடிக்க போய், இருந்த ஆங்கரிங் வாய்ப்பையும் விட்டுட்டீங்க. மத்த எல்லோருக்கும் சோஷியல் மீடியாவில பாலோவர்ஸ் அதிகமாயிட்டு இருக்கு. உங்களுக்கு குறைஞ்சிக்கிட்டே இருக்கு' என நக்கலாக ஒருவர் இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதன் ஸ்க்ரீன்ஷாட்டை தனது ஸ்டோரியில் பகிர்ந்த ஜாக்குலின், 'நான் இன்னும் பெஸ்ட்டா முயற்சிக்கிறேன் டார்லிங். உங்க பயோல 'அமைதி மற்றும் நல்ல வைப்ஸ் மட்டும்' என்று வைப்பதில் மட்டும் பிரயோஜனமில்லை. அப்படி இருக்கவும் முயற்சி செய்யுங்க. எனவே, மற்றவர்களை மோசமாக உணர செய்யுற விதத்தில நடந்துகாதீங்க. என்னை மோட்டிவேட் செய்ததற்கும் நன்றி' என டீசென்ட்டாக பதிலடி கொடுத்துள்ளார்.