துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'தவமாய் தவமிருந்து' தொடரில் கணவன் மனைவியாக நடித்து வரும் சந்தியா ராமசந்திரன் - ப்ரிட்டோ மனோவிற்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சீரியலில் மலர்-பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இருவரது கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும். இந்த கெமிஸ்ட்ரி நிஜத்திலும் மலர்ந்து இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் கடந்த ஜனவரி 25ம் தேதி சந்தியா - பிரிட்டோவின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை புகைப்படங்களுடன் இருவரும் பகிர்ந்துள்ளனர். சர்ப்ரைஸில் மூழ்கிய ரசிகர்கள் சந்தியா மற்றும் பிரிட்டோவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.