துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அதிகம் பிரபலமான ரோஷினி ஹரிப்ரியன் தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த சில பொன்னான வாய்ப்புகளை இழந்தார். அப்படியாக அவர் தவறவிட்ட வாய்ப்புகளில் ஒன்று தான் ஜெய்பீம் படத்தின் செங்கேணி கதாபாத்திரம். எனவே, தற்போது சீரியலைவிட்டு விலகி சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் இடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்த ரோஷினி நீண்ட நாட்களுக்கு பிறகு 'நீ மட்டும்' என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். கிருத்திகா நெல்சன் தயாரித்து, பாடி, இயக்கியுள்ள இந்த மெலோடி பாடலில் ரோஷினி கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறார். ரோஷினிக்கு ஜோடியாக அர்ஜுன் சிதம்பரம் நடித்துள்ளார். டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ள இந்த பாடலானது 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த பாடலின் வெற்றிக்கு பிறகு ரோஷினியின் சினிமா கனவும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.