துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சீரியல் நடிகரான நவீனுக்கும், செய்தி வாசிப்பாளரான கண்மணிக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த வருடம் திருமணம் முடிந்தது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இருவரும் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போகும் மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டிருந்தனர். தொடர்ந்து கண்மணியின் வளைகாப்பு நிகழ்வும் அண்மையில் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில், கண்மணி - நவீன் தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நவீன் 'குட்டி பட்டு வந்தாச்சு' என குழந்தையின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.