மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
'1987ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ராமாயணம். ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று காத்துக்கிடந்து பார்த்த தொடர். ஒவ்வொரு டிவிக்கு முன்னாலும் ஏராளமான மக்கள் அமர்ந்து பார்த்த தொடர். அந்த காலத்திலேயே ராமானந்த சாகர் பெரிய பட்ஜெட்டில் தயாரித்த தொடர். இதில் அருண் கோவில் ராமராகவும், தீபிகா சீதையாகவும், குத்துச்சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர்.
உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் என்ற உலக சாதனையை படைத்தது. கொரோனா ஊரடங்கின்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி 'ராமாயணம்' தொடரை 33 ஆண்டுகளுக்குப் பின் மறு ஒளிபரப்பு செய்தது. இந்த நிலையில் இந்த தொடரை 3வது முறையாக மீண்டும் ஒளிபரப்பாகிறது. ஷெமாரூ டிவியில் இந்த தொடர் இன்று (ஜூலை 3) முதல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடர் மொத்தம் 78 எபிசோட்களை கொண்டது. 'ஆதிபுருஷ்' படம் கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் நேரத்தில் 'ராமாயணம்' மீண்டும் ஒளிபரப்பாவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.