'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

‛சிதம்பர ரகசியம்', 'தெய்வமகள்' போன்ற ஹிட் சீரியல்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் கிருஷ்ணா. அண்மையில் நிறைவுபெற்ற தாலாட்டு தொடரிலும் நடிகை ஸ்ருதி ராஜுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அம்மா செண்டிமெண்டை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திராத வகையில் கடந்த ஜூன் 24 ஆம் தேதியோடு இந்த தொடர் திடீரென முடித்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள நடிகர் கிருஷ்ணா, 'நன்றாக ஓடிட்டு இருந்த சீரியலை திடீரென முடித்துவிட்டனர். இது எங்களுக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நிச்சயம் சீரியல் ஓடும் என தான் சொல்லியிருந்தனர். பல புது சீரியல்கள் வர இருப்பதால் தான் தாலாட்டு சீரியலை முடித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணாவும், ஸ்ருதி ராஜும் சீக்கிரமே புதிய சீரியலில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.