5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
சின்னத்திரை பிரபலமான பாலாவுக்கு ஒரு செலிபிரேட்டி நடிகருக்கு கிடைக்கும் வரவேற்பும், அன்பும் மக்களிடமிருந்து கிடைத்து வருகிறது. அவரும் ஏழை மக்களுக்கு ஓடி ஓடி ஓயாமல் உதவி செய்து வருகிறார். இது ஒருபுறமிக்க டிவி நிகழ்ச்சிகளில் கலக்கி வரும் பாலா அண்மையில் முத்தழகு தொடரில் கதாநாயகியாக நடித்த ஷோபனாவுக்கு லவ் புரப்போஸ் செய்துள்ளார். சில தினங்களுக்கு முன் பாலா ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் ஷோபானாவிடம் 'நான் உன்னை காதலிக்கிறேன். உன்னை வாழ்க்கை முழுவதும் நன்றாக பார்த்து கொள்வேன். உன் கனவுகளை அடைய துணையாக இருப்பேன். என் காதலுக்கு நீ ஒகே சொன்னால் நம் கல்யாணத்துக்கு இன்விடேஷன் அடித்து விடலாம்' என்று சொல்லிக்கொண்டே 'நம் கல்யாண வீடியோவை தனியார் சேனலுக்கு விற்றுவிடலாம். பன்னீர் தெளிப்பதில் ஆரம்பித்து கிடாகறியுடன் பந்தி வைப்பது வரை அவர்களை பார்த்துக்கொள்வார்கள்' என்று நக்கலாகவும் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பாலா உண்மையாகவே ஷோபனாவை காதலிக்கிறாரா? அல்லது இதற்கு முன்பு டீஜே ப்ளாக், ரோஜா ஸ்ரீ விஷயத்தை போல டிஆர்பி கேமா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.