'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

ராஜா ராணி தொடரில் சேர்ந்து நடித்த ஆல்யா மானசாவும், சஞ்சீவும் இன்று சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக வலம் வருகின்றனர். வாழ்க்கையின் அடுத்தடுத்த உச்சத்தை தொட்டு வரும் இருவரும் சண்டையிட்டு, ப்ரேக்கப் வரை சென்று, இதனால் ஆல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வரை நடந்தது என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், இன்று ஓருயிர் ஈருடல் என வாழ்ந்து வரும் இந்த தம்பதிகள் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போதே காதலிக்க தொடங்கிவிட்டனர். ஆனால், அப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விரிசல் ஏற்பட்டு ப்ரேக்கப் வரை சென்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் சஞ்சீவ் நடித்தால் ஆல்யா நடிக்கமாட்டேன் என்று சொல்லுமளவிற்கு இருவருக்கும் இடையே மோதல் பெரிதாகியுள்ளது. இதனால் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு இருவரது பெற்றோரும் வந்து சமாதனம் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால், பலன் அளிக்கவில்லை. இறுதியில் ஓயாமல் போட்ட சண்டையால் ஆல்யாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுவிட, சஞ்சீவுக்கு பதிலாக வேறொரு நடிகரையும் ஆடிஷன் செய்து நடிக்க வைக்க முயற்சி எடுத்துள்ளனர். அதற்குள் ஆல்யாவே மனமிறங்கிவிட இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்.
ஆனாலும், ஷூட்டிங்கை தவிர வேறு எதற்காகவும் பேசிக்கொள்வது கிடையாதாம். ஒருகட்டத்தில் முழுமையாக சமாதானம் ஆன ஆல்யா சஞ்சீவுடனான ப்ரேக்கப்பை முறித்து கொண்டு வாழ்க்கை பயணத்தில் மூன்று முடிச்சுகளுடன் இணைந்துவிட்டார். இருவரது காதலுக்கு பின்னால் இவ்வளவு சம்பவங்கள் நடந்ததா என ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.