உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

ராட்சசன், ஜில்லா, கதை சொல்லப் போறோம், ஜீவா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா தாஹா. இப்போது ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் தொடரின் இரண்டாவது சீசனில் நாயகியாக நடிக்கிறார். சின்னத்திரையில் நாயகியாக நடித்தாலும் சினிமாவில் நாயகியாக நடித்து சாதிக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்கிறார் ரவீனா.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிப்பு தான் என் உயிர், அதுதான் என் வாழ்க்கை என்று முடிவு செய்திருந்தேன். என் அம்மாவும் அதையே விரும்பினார். அதனால் மூன்று வயதில் இருந்து நடனம் கற்க ஆரம்பித்து 4 வயதில் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் மேடையில் ஆடி, பின்னர் விளம்பர படங்களில் நடித்து, சின்னதிரைக்கு வந்தேன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சின்னத்திரையில் இப்போது நாயகியாக நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.
என்றாலும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும், சினிமாவிலும் நாயகியாக சாதிக்க வேண்டும், ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சின்னத்திரை தொடர்கள் நீண்ட காலம் ஒளிபரப்பாவதால் மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து விடலாம். என்றாலும் சினிமாவில் நடித்தால்தான் ஒரு முழுமையான நடிகையாக முடியும். அதற்கான தகுதியை நான் இன்னும் வளர்த்துக் கொள்வேன். என்கிறார் ரவீனா.