மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான டாப் 9 போட்டியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
விஜய் டிவியில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று 8-வது சீசனில் நுழைந்துள்ளது. பல போட்டியாளர்கள் பங்கு பெற்ற சூப்பர் சிங்கர் 8, 45 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது.
சூப்பர் சிங்கர் 8-வது சீசனில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெறப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நடக்கப்போகும் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பட்டியலை விஜய் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
டாப் 9 பட்டியலில் இருக்கும் அபிலாஷ், பரத், அனு ஆனந்த், மானசி, முத்து சிற்பி, அய்யனார், ஆதித்யா, ஸ்ரீதர் சேனா, அரவிந்த் ஆகியோர் இந்த வாரம் போட்டியிடுகின்றனர். இவர்களில் யார் யார் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.