2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா? என ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு இல்லை என பதிலளித்துள்ள நடிகர் இர்பான் குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி சீரியலான "கனா காணும் காலங்கள்" தொடரில் அறிமுகமானவர் நடிகர் இர்பான். 90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொடரான "கனா காணும் காலங்கள்" தொடருக்கு இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர். இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இர்பான், பின்னாளில் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார். பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். ஆனால், இவரது படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இர்பான் சமீபத்தில் இன்ஸ்டாவில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா? என ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு பதிலளித்த இர்பான், "சண்டை, மோதல்களில் ஈடுபடுவதற்கான சரியான ஆள் நான் இல்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை" என கூறினார். அதேசமயம், குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்து கொள்வேன் எனவும் முந்தைய சீசனிலேயே வாய்ப்பு கிடைத்தும் சமைக்க தெரியாததால் தவறவிட்டு விட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.