தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

'ஆதலினால் காதல் செய்வீர்' என்ற டிஜிட்டல் தொடரின் ப்ரோமோ வெளியாகவுள்ளது. 'வல்லமை தாராயோ' யூ-டியூப் வலை தொடரின் வெற்றிக்கு பிறகு விகடன் டெலிவிஸ்டாஸ் 'ஆதலினால் காதல் செய்வீர்' என்கிற டெய்லி சீரிஸை தயாரித்துள்ளது. சென்னையை மையப்படுத்திய இந்த கதையில் வெவ்வேறு ஊர்களிலிருந்து வரும் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் ஒரே வீட்டில் தங்குகிறார்கள். வளர்ந்த சூழல், குடும்ப பிண்ணனியால் வித்தியாசமான பின்புலங்களை கொண்ட இவர்களது வாழ்வில் சென்னையில் உண்டாகும் மாற்றங்கள் தான் தொடரின் கதை. பாலின வேறுபாடின்றி ஒரே வீட்டில் தங்கும் இளைஞர்களின் மனநிலை, அவர்களது பெற்றோர்கள் மனநிலை, காதல், நட்பு என பல டுவிஸ்டுகளுடன் இந்த தொடரின் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர். ஆகஸ்ட் 23 முதல் விகடன் டெலிவிஸ்டாஸ் யூ-ட்யூப் பக்கத்தில் தினசரி எபிசோடுகளாக இந்த தொடர் வெளியாக உள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் 'ஆதலினால் காதல் செய்வீர்'! தொடரை சமூக வலைத்தளங்களில் இது உங்க கதை என புரோமோட் செய்து வருகின்றனர்.