இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
சின்னத்திரை சங்கத்தின் நிர்வாக குளறுபடியால் சங்கத்திற்கு பூட்டு போட்டு, காவல்நிலையத்தில் புகார் தரும் அளவுக்கு களேபரம் ஆகியுள்ளது.
சின்னத்திரை நடிகர் சங்கம் 2013ல் நடிகர் வசந்த்தால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்திற்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். மொத்தம் 1,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓட்டு போட தகுதியுள்ளவராவர்.
2018 இறுதியில் தேர்தல் நடந்தபோது, ரவிவர்மா தலைவராக தேர்வானார். 2019 இறுதியில் மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் ரவிவர்மா மீது பணம் கையாடல் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நிர்வாகிகளிடையே எழுந்த கருத்து வேறுபாட்டால், சங்கத்தை கலைத்து, அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி ஒரு தரப்பினர் தீர்மானம் இயற்றினர். ரவிவர்மா தரப்பிலோ, தலைவர் பதவியை விட்டு விலகாமல் மல்லுக்கட்ட, சங்கத்திற்கே பூட்டு போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் இருதரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 20ம் தேதி, ‛நிர்வாகம் கலைக்கப்பட்டது குறித்து அரசு அதிகாரியை வைத்து பொதுக்குழு கூட்டி கணக்கு வழக்குகளை கொடுத்து தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும்' என, காவல்துறை முன் நிர்வாகத்தினர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்த விவரம் இன்னும் சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி, மீண்டும் சங்கத்தில் களேபரம் ஆரம்பமாகியுள்ளது.