மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சின்னத்திரை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளும் புரோமோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் டிவி அறிமுகமாகி சேனல்கள் முளைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு, சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிகள் தான் இசை நிகழ்ச்சியில் மிகவும் புகழ் பெற்றிருந்தன. ஆனால் தற்போதோ சின்னத்திரை இசை நிகழ்ச்சி என்றாலே அது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தான். அதற்கு இணையாக பல சேனல்கள் இசை நிகழ்ச்சிகளை தயாரித்து வந்தாலும் ரசிகர்களின் மனதில் நிற்பது என்னவோ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.
இந்நிலையில் தான் இசை நிகழ்ச்சியில் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் வகையில் இசைஞானியைக் கொண்டு புதியதொரு நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது ஒரு டிவி நிறுவனம். இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு ராஜபார்வை என பெயரிடப்படுள்ளது. இதன் புரோமோவும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இளையராஜா ஏதோவொரு நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டாலே அது களைக்கட்டும். தற்போது அவரே ஒரு இசைநிகழ்ச்சியில் முழுக்க முழுக்க கலந்து கொள்கிறார் என்றதும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து வருகின்றனர்.