சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
'ஒன்றல்ல... இரண்டல்ல... எத்தனை ஆண்டுகளானாலும் சினிமா நடிகையாக வேண்டும் என்ற என் லட்சியத்தை தொடர் முயற்சியால் சாத்தியப்படுத்தி இருக்கிறேன்' என்கிறார் நடிகை வர்ஷினி. பிக்பாஸ் 8 சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான வர்ஷினி இது எப்படி சாத்தியமாயிற்று என தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்ததாவது...
சென்னை மயிலாப்பூர் பிறந்து வளர்ந்த இடம். எனக்கு சிறிய வயதிலேயே சினிமா மீது ஓர் ஈர்ப்பு. மேல்நிலைக்கல்வி படித்த நிலையில் சில விளம்பர பட வாய்ப்புகள் வந்தன. அம்மா படிப்பு தான் பர்ஸ்ட், மற்றவை நெக்ஸ்ட் என கறாராக கூறி விட்டார். கல்லுாரியில் படித்த போது அம்மாவின் தோழி மூலம் 'சதுரங்க வேட்டை 2' பட வாய்ப்பு கிடைத்தது. படம் வெளியாகவில்லை. ஆனாலும் அந்த படம் வரமே சாபம், லக்கி டிரிப்ஸ், லாரா படங்களில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியது.
திரைப்படங்களை தாண்டி பிக்பாஸ் சீசன் 8ல் பங்கு எடுத்தது மக்களிடம் என்னை கொண்டு போய் சேர்த்தது. எங்கு சென்றாலும் பிக்பாஸ் வர்ஷினி என ரசிகர்கள் அழைத்தார்கள். அந்த ரசிகர்கள் தந்த ஆதரவால் 'சொட்ட சொட்ட நனையுது' படத்தில் ஹீரோயினாக ஆகியுள்ளேன். படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதன்பிறகு தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.
சமீபத்தில் வெளியான 'டிடி நெக்ஸ்ட்' படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளில் தான் நடித்திருக்கிறேன். தியேட்டரில் என்னை பார்த்து ரசிகர்கள் கொண்டாடியதை மறக்கவே முடியாது.
ஒன்றல்ல... இரண்டல்ல... எத்தனை ஆண்டுகளானாலும் நடிகையாக வேண்டும் என இருந்தேன். அது இன்று சாத்தியமாயிருப்பது மகிழ்ச்சி.
கமல் பெரிய கலைஞர். அவரிடமிருந்து எவ்வளவோ கற்று கொள்ள வேண்டும். தனுஷ் நடிப்பு பிடிக்கும். நயன்தாராவின் பல படங்களை பார்த்த போது இதுபோன்ற படங்களில் நமக்கு வாய்ப்பில்லையே என ஏக்கம் பிறக்கும். கேங்க் ஸ்டாராக அதிரடி படங்கள் கிடைத்தால் ஒரு கை பார்த்து விடுவேன். அதற்கு ஏற்ப என் தோற்றம் இருப்பதாக பார்ப்பவர்கள் கூறுகின்றனர்.
சூட்டிங், ஆங்கரிங் இருந்தாலும் தினமும் தவறாமல் ஜிம் சென்று விடுவேன். கண்ட உணவுகளையும் எடுத்து கொள்வதில்லை. பழ ரசங்களை முடிந்தளவுக்கு மூன்று வேளையும் கூட எடுத்து கொள்வேன். இதுதான் என் பிட்னஸ் ரகசியம்.
சினிமாவில் எனக்கு என்று ஒரு பெயர் பெற வேண்டும். மக்களுக்கு பிடித்தமான நடிகையாக இருக்க வேண்டும் என்பதை தவிர வேறு பெரிய ஆசை ஏதுமில்லைங்க என்றவாறு நம்மிடமிருந்து விடைபெற்றார்.