சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

காதல் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்றுவிட்ட, பாணா காத்தாடி நடிகைக்கு, அவ்வப்போது சில சினிமா புள்ளிகள், 'ஐ லவ் யூ மெசேஜ்' அனுப்பி, 'ப்ரபோஸ்' செய்வதுடன், போன் செய்தும், 'டார்ச்சர்' கொடுத்து வருகின்றனர்.
இதுபோன்ற நபர்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, சமீபத்தில், 'மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமலேயே நான், தனித்தே வாழ்ந்து காட்டப் போகிறேன்...' என, ஒரு பேட்டி கொடுத்தார், அம்மணி. இருப்பினும், அந்த ரோமியோக்கள் அவரை விடாமல் துரத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து, சினிமா வட்டாரங்களில் கொடுத்திருந்த தன் மொபைல் நம்பரை மாற்றி, தற்போதைய புதிய நம்பரை ரகசியமாக வைத்திருக்கிறார், பாணா காத்தாடி நடிகை.