படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடுக்கடலில் சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆர்யன் கான் தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். இந்த வழக்கில் ஷாருக்கானின் மானேஜர் பூஜா தத்லானியும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த கடந்த புதன் கிழமை (நேற்று) ஆஜராகுமாறு போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் நேற்று அவர் ஆஜராகவில்லை. தனக்கு உடல்நலம் சரியில்லை என்று தனது வழக்கறிஞர் மூலம் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் பூஜாவின் சாட்சியம் மிகவும் முக்கியமானது. அதனால் அவரை விசாரணையில் இருந்து விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை. உரிய அவகாசம் வழங்கி அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பபடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.




