நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த மாதம் ஆராத்யாவின் 10வது பிறந்தநாளை மாலத்தீவில் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது எடுத்த சில போட்டோக்களை அபிஷேக் பச்சன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
இந்த படத்தை பற்றி சிலர் கிண்டலாக கமெண்ட் போட்டிருந்தார்கள். இதுகுறித்து அபிஷேக் பச்சன் கூறியிருப்பதாவது: சினிமாவில் நான் பிரபலமாக இருப்பதால், என்னைப் பற்றி வரும் விமர்சனங்களை எதிர்கொண்டாக வேண்டும். ஆனால், என் மகளை கேலி செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆராத்யாவை கேலி செய்பவர்கள், தைரியம் இருந்தால் எனக்கு நேராக வந்து பேசட்டும். என்று கூறியுள்ளார்.
ஒரு தந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று இப்போது அபிஷேக் பச்சனுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.