'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? |
ராஜமவுலி இயக்கி உள்ள பாகுபலி , ஆர் ஆர் ஆர், தமிழில் விஜய் நடித்த மெர்சல் மற்றும் தலைவி என பல படங்களுக்கு கதை எழுதியவர் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத். அதோடு ஹிந்தியிலும் சில படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கும் விஜயேந்திர பிரசாத், சல்மான்கான் நடித்த பஜ்ரங்கி பைஜான் என்ற படத்துக்கும் கதை எழுதியிருந்தார். கபீர் கான் இயக்கிய இந்த படம் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. இதற்கும் விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார்.
இந்நிலையில் இருதினங்களுக்கு முன் தனது 56வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான்கான், பஜ்ரங்கி பைஜான் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார். அந்த படத்திற்கு பவன் புத்ர பைஜான் என டைட்டில் வைத்திருப்பதாகவும், அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்தப் படத்தையும் பஜ்ரங்கி பைஜான் படத்தை இயக்கிய கபீர்கான் தான் இயக்கப் போகிறாரா இல்லை வேறு இயக்குனர் இருக்கிறார்களா என்பது குறித்த தகவலை சல்மான்கான் வெளியிடவில்லை. என்றாலும் தனது பிறந்தநாளில் புதிய படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக சல்மான்கான் வெளியிட்டதால் அவரது ரசிகர்கள் அந்தப் படத்தின் டைட்டிலை மிகப்பெரிய அளவில் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.