சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த 2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ஏகோபித்த ஆதரவை பெற்றது. போலீஸுக்கு உதவும் கைதி என்கிற கான்செப்ட்டில் வெறும் நான்கு மணிநேரத்தில் அதிலும் இரவில் நடக்கும் விறுவிறுப்பான கதை ரசிகர்களை ரொம்பவே ஈர்த்தது.
இந்தநிலையில் இந்தப்படம் தற்போது ஹிந்தியில் ‛போலா' என்கிற பெயரில் ரீமேக்காகிறது. கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். அஜய் தேவ்கனின் உறவினரான தர்மேந்திர சர்மா என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் இதற்கான துவக்க விழா பூஜையுடன் துவங்கின.
சில வருடங்களுக்கு முன் அண்ணன் சூர்யாவின் ஹிட் படமான சிங்கம் ரீமேக்கில் நடித்து வெற்றியை ருசித்தார் அஜய் தேவ்கன். இப்போது அவரது தம்பி கார்த்தியின் கைதி ரீமேக்கிலும் அதேபோன்ற ஒரு வெற்றியை பெறுவார் என நிச்சயமாக நம்பலாம்.