தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தே தே பியார் தே 2'. இதில் நடிகர் மாதவன், ரகுல் ப்ரீத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதிலும் மாதவனின் மகளாக நடித்திருக்கிறார் ரகுல் பிரீத் சிங். அன்சுல் சர்மா இயக்கியுள்ளார். அஜய் தேவ்கனும், மாதவனும் இணைந்து கடந்த வருடம் வெளியான சைத்தான் என்கிற படத்திலும் நடித்திருந்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த பட புரமோஷன் நிகழ்ச்சியில் மாதவன் பேசும்போது, “சைத்தான் படத்தைப் போலவே இந்த படத்திலும் அஜய் தேவ்கன் அனைவரையும் நன்றாக கவனித்துக் கொண்டார். ஆனால் என்ன.. ஒரு இளம் பெண்ணுக்கு தந்தையாக நடிப்பது தான் கஷ்டமாக இருந்தது” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து அஜய் தேவ்கன் பேசியபோது, “சைத்தான் படத்தில் அவர் என்னுடைய மகளை என்னிடமிருந்து பிரித்து அபகரித்தார். இந்த படத்தில் அவரது மகளை (ரகுல் பிரீத் சிங்) நான் அவரிடமிருந்து பிரிக்கும் வேலையை செய்து இருக்கிறேன். அந்த வகையில் இது சைத்தான் படத்தின் சீக்வல் என்று கூட சொல்லலாம்” என்று ஜாலியாக கூறினார்.
இதற்கு முன்பு வெளியான சைத்தான் படத்தில் அஜய் தேவகன், ஜோதிகா தம்பதியினருக்கு மகளாக ஜானகி போடிவாலா என்பவர் நடித்திருந்தார். அந்த படத்தில் பிளாக் மேஜிக் செய்யும் ஒரு மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாதவன், அஜய் தேவகன் குடும்பத்தினருடன் நெருங்கிய நட்புடன் பழகி அவரது மகளை தனது பிளாக் மேஜிக்கு பயன்படுத்த அபகரிக்க திட்டமிடுவார். அதை அஜய் தேவ்கன் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் அந்த படத்தின் கதை. இதை குறிப்பிட்டே அஜய் தேவ்கன் அப்படி பேசியுள்ளார்.




