5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகத்தில் அறிமுகமானவர் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஆலியா பட்.
படம் தயாரிப்பில் இருக்கும் போதே ஆலியாவின் கதாபாத்திரம் 10 நிமிடங்கள் மட்டுமே வரும் என்று தகவல் வெளியானது. இருந்தாலும் படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றும் சொன்னார்கள். படம் வெளிவந்த பின் பார்த்தால் கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் தான் ஆலியா நடித்திருந்தார்.
தன்னுடைய கதாபாத்திரம் படத்தில் முக்கியத்துவமாக இல்லை என்று வந்த விமர்சனங்களால் ஆலியா 'அப்செட்' ஆனதாகத் தகவல் வெளியானது. அதனால், 'ஆர்ஆர்ஆர்' பற்றி அவர் ஏற்கெனவே பதிவிட்டிருந்த சில பதிவுகளை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் இருந்தும் 'டெலிட்' செய்தார்.
இந்நிலையில் அவருடைய இன்ஸ்டா ஸ்டோரியில் 'ஆர்ஆர்ஆர்' படம் 100 கோடி வசூலித்த போஸ்டர் ஒன்றை ஷேர் செய்திருந்தார். இதன் மூலம் அவரைப் பற்றி வெளியான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஆலியா.